வவுனியா மாவட்டத்தில் அதிகளவில் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர்கள் சிலர் விற்பனை

Kanimoli
3 years ago
வவுனியா மாவட்டத்தில் அதிகளவில் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர்கள் சிலர் விற்பனை

வவுனியா மாவட்டத்தில் அதிகளவில் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர்கள் சிலர் விற்பனை செய்வதாகவும் சில மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சிட்டை இல்லாமல் விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மருந்தகங்களில் 25 ரூபாய் பெறுமதியான குறித்த வலி நிவாரண மாத்திரையை மருத்துவர்களின் பரிந்துரை சிட்டை இல்லாமல் வழங்குவதாயின் அதனை 700 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவர்கள் சிலரும் இந்த மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறான நிலையில் சில வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்ளும் போது அவை போதையை தரக்கூடியவை என்பதனால் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி உட்கொள்வது உயிராபத்தை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் அந்த மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை சிட்டை இன்றி மருந்தகங்களில் விற்பனை செய்வது சட்டவிரோதமானதுமாகும்.

இதேவேளை, அண்மைக்காலமாக வவுனியா மாவட்டத்தில் இளையோரிடையே போதைப்பழக்கம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4