கல்லாறு பகுதியில் உள்ள வயல் வெளியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

Kanimoli
3 years ago
 கல்லாறு பகுதியில் உள்ள வயல் வெளியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள வயல் வெளியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இச்சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்றைய தினம் (02-11-2022) புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 59 வயதான ஹெட்டி ஆராச்சிகே நெல்சன் என்பவர் உயிரிழந்திருப்பதாகவும், 60 வயதான W.M பியஸிஸ்ஸ என்பவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருவதாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் நபர் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4