மிரட்டல் விடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

Prasu
3 years ago
மிரட்டல் விடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. ஆனாலும், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் மிகப்பெரிய கூட்டுப்பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கின. 

இருநாட்டு விமானப்படைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான விமானங்கள் 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபட்டன. 

இதற்கிடையே, தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தது. 

இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. 

இந்த ஏவுகணை கடல் பகுதியை நோக்கி சீறிப் பாய்ந்ததாக தெரிவித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4