சவுதியின் எரிசக்தி மையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்பு - அமெரிக்கா எச்சரிக்கை

Prasu
2 years ago
சவுதியின் எரிசக்தி மையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்பு - அமெரிக்கா எச்சரிக்கை

சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் பகிர்ந்துள்ள தகவல்களின்படி, சவுதி அரேபியாவில் உள்ள எரிசக்தி உற்பத்தி மையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடந்த வாய்ப்பிருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் தங்கள் நலன்களையும் பிராந்தியத்தில் உள்ள தங்கள் நட்பு நாடுகளையும் பாதுகாக்க அமெரிக்கா தயங்காது என்று தெரிவித்த அவர், தற்போது பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ பாதுகாப்பு நிலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை இல்லை என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, சவுதி அரேபியாவில் உள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் செயல்பட்டு வரும் இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும், இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!