வெளிநாட்டிலிருந்து ஜேர்மனிக்கு டோனட்டிற்குள் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்த முயன்ற நபர்

Prasu
2 years ago
வெளிநாட்டிலிருந்து ஜேர்மனிக்கு டோனட்டிற்குள் மறைத்து வைத்து போதைப்பொருள் கடத்த முயன்ற நபர்

ஞாயிற்றுக்கிழமையன்று, ஜேர்மனியின் பவேரியா மாகாணத்துக்குள் ரயில் மூலம் நுழைந்த வெளிநாட்டவர் ஒருவரை பொலிஸார் சோதனையிட்டிருக்கிறார்கள்.அப்போது, அவர் வைத்திருந்த டோனட் என்னும் உணவுபொருளை அவர்கள் சோதனையிட்டுள்ளார்கள். 

அந்த உணவுக்குள் ஆணுறைகள் இரண்டும், சிறு கவர் ஒன்றும் இருப்பதைக் கண்ட பொலிஸார், அவர் போதைப்பொருள் ஒன்றை மறைத்து வைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அந்த 33 வயது நபர் செக் குடியரசிலிருந்து பவேரியாவுக்குள் நுழைந்துள்ளார்.

அந்த டோனட்டுக்குள் ஜாம் வைக்கும் இடத்தில் அந்த போதைப்பொருள் வைக்கப்பட்ட ஆணுறைகளையும், கவரையும் மறைத்து வைத்துள்ளார் 

அவர். அவர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை டோனட்டில் போதைப்பொருளைக் கடத்தலாம் என தாங்கள் யோசித்தது கூட இல்லை என்கிறார்கள் பொலிஸார்.  ஆனாலும், அனுபவம் மிக்க தங்கள் அலுவலர்கள் கண்களுக்கு அவை தப்பவில்லை என்கிறார்கள் அவர்கள். 

டோனட்டுக்குள் போதைப்பொருள் இருக்கக்கூடும் என கணித்தது எப்படி என்று கேட்டால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் சந்தேகத்தை உருவாக்கியதாக மட்டும் தெரிவித்த பொலிஸார், எப்படி சந்தேகம் ஏற்பட்டது என்பதை விளக்கவில்லை. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!