அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 03.11.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 03.11.2022

மேஷம்
அசுவினி : பண வரவில் இருந்து வந்த தடை விலகும். புதிய முயற்சிகள் வேண்டாம்.
பரணி : தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வழக்கமான செயல்களில் மட்டும் கவனம் செலுத்தவும்.
கார்த்திகை 1 : விழிப்புணர்வுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள்

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : தொழிலை விருத்தி செய்யும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.
ரோகிணி : உத்தியோகத்தில் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்கள் செயலால் சமூகத்திற்கு நன்மை உண்டாகும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : நேற்றைய எண்ணம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நன்மையாகும்.
திருவாதிரை : நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் எண்ணம் எளிதில் நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3 : தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.

கடகம்
புனர்பூசம் 4: சந்திராஷ்டமம் என்பதால் கவனமுடன் செயல்படுங்கள். தடை ஏற்படும்.
பூசம் : செய்யும் செயல்களில் முன்னேற்றம் குறையும். குழப்பம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : மற்றவர்களிடம் வீண் விவாதம் வேண்டாம். மனவுளைச்சலால் சிரமத்தை சந்திப்பீர்.

சிம்மம்
மகம் : உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரம் : நண்பர்கள் உதவியுடன் உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
உத்திரம் 1: வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : எதிர்ப்புகளை இல்லாமல் செய்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
அஸ்தம் : உறவினர்களால் உண்டான பிரச்னைகள் தீரும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
சித்திரை 1, 2 : வியாபார வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். மறைமுகத் தொல்லை விலகும்.

துலாம்
சித்திரை 3, 4 : பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
சுவாதி : பயணத்தை ஒத்திப்போடுவீர்கள். வழக்கமான செயல்களில் நன்மைகள் உண்டு.
விசாகம் 1, 2, 3: பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்
விசாகம் 4 : உறவினர் ஒருவரால் நன்மையுண்டு. தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அனுஷம் : தொழிலில் இருந்து வந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும்.
கேட்டை : பணிபுரியும் இடத்தில் சாதகமான நிலை உண்டாகும். பழைய கடனை சிறிது அடைப்பீர்கள்.

தனுசு
மூலம் : சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும் நாள்.
பூராடம் : வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
உத்திராடம் 1 : வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். வருமானம் அதிகரிக்கும்.
திருவோணம்: உங்கள் செல்வாக்கு வெளிவட்டாரத்தில் உயரும். ஆரோக்கியம் சீராகும் நாள்.
அவிட்டம் 1, 2: வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும்நாள்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகுவார்கள்.
சதயம் : குடும்பத்தில் வாக்கு வாதம் உண்டாகும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும்.
பூரட்டாதி 1, 2, 3 : பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பணவரவு திருப்தி அளிக்கும்.

மீனம்
பூரட்டாதி 4 : திடீர் செலவால் சங்கடம் அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அவசிய தேவை ஒன்றை நிறைவேற்றுவீர்கள்
ரேவதி : இன்று முடிவிற்கு வரவேண்டிய வேலை நாளைக்கு தள்ளிப்போகும் நாள்.