தனியாகவோ, கூட்டணியாகவோ தேர்தலை எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகவே உள்ளது-மைத்திரிபால சிறிசேன

Kanimoli
3 years ago
தனியாகவோ, கூட்டணியாகவோ தேர்தலை எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகவே உள்ளது-மைத்திரிபால சிறிசேன

தனியாகவோ, கூட்டணியாகவோ தேர்தலை எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலை பிற்போடும் அரசின் முயற்சியை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளும் சக்தி எமக்கு இருக்கின்றது. தனியாகவோ, கூட்டணியாகவோ களமிறங்க நாம் தயார். எமது கட்சியுடன் இணைய முக்கிய பிரமுகர்கள் பலர் தயாராக உள்ளனர்.

கட்சியைவிட்டு வெளியேறியவர்களை விடவும் வரவுள்ளவர்கள் சிறந்தவர்கள் என முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அதேவேளை, அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், அமைச்சு பதவிகளை கைவிட்டால் நாளை வேண்டுமானாலும் மீண்டும் கட்சியில் இணையலாம் என சு.க. பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4