இலங்கையில் கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி - தங்க நகைக் கடைகளின் உரிமையாளர்கள்

Prasu
1 year ago
இலங்கையில் கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி - தங்க நகைக் கடைகளின் உரிமையாளர்கள்

இலங்கையில் கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதென கொழும்பு செட்டியார் வீதியில் உள்ள தங்க நகைக் கடைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று ஒரு பவுன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 156,400 மற்றும் ஒரு பவுன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 169,000 என அறிவிக்கப்பட்டது.

நேற்று முன் தினத்துடன் ஒப்பிடுகையில், ஒரு பவுன் 22 காரட் தங்கத்தின் விலை 1,100 ரூபாவாலும், 24 காரட் தங்கத்தின் விலை 1,000 ரூபாவாலும் குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் ஒரு பவுன் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 157,500 ஆகவும், 24 காரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை ரூ. 170,000 என அறிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் 22 காரட் தங்கம் ஒரு பவுன் விலை ரூ. 161,000 மற்றும் ஒரு பவுன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 175,000 என பதிவாகியுள்ளதாக தங்க நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.