பலத்த சர்ச்சைகளுக்கு பின் சா்வதேச பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தன் முடிவை மாற்றிய ரிஷி சுனக்!

#world_news
Nila
2 years ago
பலத்த சர்ச்சைகளுக்கு பின் சா்வதேச பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தன் முடிவை மாற்றிய ரிஷி சுனக்!

சா்வதேச பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தனது முடிவை மாற்றி கொள்வதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

அதன்படி எகிப்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் சா்வதேச பருவநிலை மாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளார். இது குறித்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் ட்விட்டர் பதிவில், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், நீண்ட கால நோக்கில் பொருளாதார வளா்ச்சியைப் பெற முடியாது.

புதுப்பிக்கத்தக்க எரிபொருள்களில் கவனத்தை செலுத்தாவிட்டால், எரிசக்தி தன்னிறைவை அடைய முடியாது. அதன் காரணமாகத்தான் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பருவநிலை மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறேன. பாதுகாப்பான, நிலைத்தன்மையுடன் கூடிய எதிா்காலத்தை உருவாக்குவதற்கான கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்காக அந்த மாநாட்டில் நான் கலந்துகொள்வேன் என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, எகிப்தில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில், ரிஷி பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டது. ஏனெனில் இந்த மாதம் 17ஆம் திகதிக்குள் அவசரகால பட்ஜெட்டை தாக்கல் செய்வது உள்பட, உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீா்ப்பதில் அவர் ரிஷி சுனக் முழு கவனமும் செலுத்த வேண்டியுள்ளது.

இது, பலத்த சா்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது ரிஷி மறு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!