கார் டிரைவரை காதலித்து திருமணம் செய்த பணக்கார வீட்டு பெண்

Prasu
2 years ago
கார் டிரைவரை காதலித்து திருமணம் செய்த பணக்கார வீட்டு பெண்

பாகிஸ்தானிய பெண் ஒருவர் கார் டிரைவராக வேலை செய்பவரின் கியர் மாற்றும் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு அவரையே காதலித்து கரம் பிடித்து உள்ளார். 

பணக்கார வீட்டு பெண்ணான அவர், கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கு கார் ஓட்ட கற்றுக்கொடுத்த டிரைவர் கியர் மாற்றுவதில் படு கில்லியாக இருந்திருக்கிறார். 

பயிற்சி கொடுத்தபோது அவரது கியர் மாற்றும் ஸ்டைலை கண்ட அந்த பெண்ணுக்கு, அவர் மீது காதல் வந்தது. உடனே அவர் தன்னுடைய வீட்டில் காதலை பற்றி கூறி, அந்த கார் டிரைவரையே திருமணம் செய்திருக்கிறார். 

இது தொடர்பாக `டெய்லி பாகிஸ்தான்' என்ற செய்தி தளத்துக்கு பேட்டியளித்துள்ள அந்த ஜோடி தங்களது காதல் நினைவலைகளை பகிர்ந்திருக்கிறார்கள். 

அப்போது, அவர் கியரை மாற்றும் ஸ்டைல் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது என அப்பெண் கூறியுள்ளார். 

மேலும் காதல் கணவருக்காக பாட்டு பாடச் சொல்லி கேட்டபோது அந்த பெண், ரிஷி கபூர், டிம்பிள் கபாடியா நடித்த பாபி படத்தில் இடம்பெற்ற ஹும் தும் ஏக் காம்ரே மேயின் என்ற பாடலை பாட, அதற்கு அப்பெண்ணின் கணவர் லைட்டா ஸ்வரம் குறையுது என கிண்டல் அடித்திருக்கிறார். 

இந்த காதல் திருமண தம்பதியின் பேட்டி வைரலாகி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!