ரூ.646 கோடிக்கு சொகுசான நவீன விமானம் வாங்கிய எலான் மஸ்க்
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். இவர் ரூ.646 கோடி மதிப்புள்ள சொகுசு விமானத்தை வாங்கி உள்ளார்.
ஜி700 என்ற ஜெட் விமானத்தை வாங்க அவர் ஆர்டர் செய்துள்ளார். 57 அடி நீளமுள்ள இந்த விமானம் நவீன வசதிகளை கொண்டது.
7500 கடல் மைல்கள் தொடர்ந்து பறக்கக்கூடியது. எரிபொருள் நிரப்பும் தேவையின்றி ஆஸ்டினில் இருந்து ஹாங்காங்குக்கு பறக்க முடியும்.
ஜி700 விமானம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விமானத்தை அமெரிக்க விமான உற்பத்தியாளரான கல்ப்ஸ்ட்ரிம் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த விமானம் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. விமானத்தில் வை-பை உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன.
எலான் மஸ்க் தனது பயணத் தூரங்களுக்கு ஜி650 இ.ஆர் என்ற தனியார் விமானத்தை பயன்படுத்தி வருகிறார்.
இந்த விமானத்துக்கு பதில் அடுத்த ஆண்டு முதல் புதிய விமானத்தை பயன்படுத்த உள்ளார்.