வன்முறை உருவாக்க மீண்டும் மீண்டும் பொய் சொல்லப்பட்டது-எதிர்க்கட்சியினரை குற்றம்சாட்டும் ஜோபைடன்

Prasu
3 years ago
வன்முறை உருவாக்க மீண்டும் மீண்டும் பொய் சொல்லப்பட்டது-எதிர்க்கட்சியினரை குற்றம்சாட்டும் ஜோபைடன்

அமெரிக்காவில் எந்த ஒரு ஜனாதிபதி பதவிக்கு வந்தாலும் அவரது நான்கு வருட பதவி காலத்தில் மத்தியில் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும். 

இந்த தேர்தல் ஆனது இடைக்கால தேர்தல் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் அங்கு ஜோபைடன் ஜனாதிபதியாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் அவருடைய பதவி காலத்தில் மத்தியில் வரும் எட்டாம் தேதி நாடாளுமன்ற கீழ் சபையில் உள்ள மொத்த இடங்களான 435 இடங்களுக்கும் மேல்சபையான செனட் சபையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த தேர்தல் வெற்றி பெற்று 2024 ஆம் வருடம் அங்கு நடக்க இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறப் போகிறது என்பதற்கு சமிஞ்சையாக அமையும். இந்த சூழலில் ஜனநாயகம் மற்றும் அரசியல் வன்முறைக்கான அச்சுறுத்தல் பற்றி அமெரிக்க ஜனாதிபதி பேசியபோது, அமெரிக்க ஜனநாயகம் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது. 

ஏனென்றால் தோற்கடிக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி 2020 ஆம் வருடம் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்திருக்கின்றார். 

மேலும் அவர் மக்களின் விருப்பத்தை ஏற்க மறுக்கின்றார் தான் தோற்றுப் போனதை அவர் ஏற்க மறுக்கின்றார். அமெரிக்காவில் வாக்காளர் மிரட்டல் அல்லது அரசியல் வன்முறைக்கு இடமில்லை என கூற வேண்டும்.

மேலும் ஜனநாயக கட்சியினரையோ அல்லது குடியரசு கட்சியினரையோ யாரை குறி வைத்தாலும் ஒரு நாடக நாம் ஒரே பேரும் ஒன்று பெற்ற குரலில் பேச வேண்டும். 

மேலும் ஜனநாயக கட்சியினருக்கு குடியரசு கட்சியினருக்கு மற்றும் பிற மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல் என்பது அதிகாரத்தை கைப்பற்றவும் லாபத்திற்காகவும் சொல்லப்பட்ட பொய்களால் ஏற்பட்டுள்ளது. 

சதிக்காக கொல்லப்பட்ட பொய்களால் ஏற்பட்ட விளைவு இது கோபம் வெறுப்பு மற்றும் வன்முறையை உருவாக்க மீண்டும் மீண்டும் பொய்கள் சொல்லப்பட்டிருக்கிறது. 

இந்த தருணத்தில் அந்த பொய்களில் நாம் உண்மையுடன் எதிர் கொள்ள வேண்டும் நமது தேசத்தின் எதிர்காலத்தை பொறுத்தது என அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4