இன்றைய வேத வசனம் 4.11.2022: உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 4.11.2022: உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்

ஒரு சிறிய நகரத்தில், பாலன் என்னும் சிறுவன் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்.அவனது அப்பா அவனுடைய சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். பாலனோ உடல் ஊனமுற்றவன். 

அவனுக்கு, அம்மா லட்சுமியை மிகவும் பிடிக்கும். அவனுக்கு வயது 18. இந்த சிறிய வயதில் தந்தை இறந்த பிறகு குடும்ப பொறுப்பெல்லாம் இவன் தலையின் மேல் வந்தது.

ஆனால் இவன் ஊனமுற்றதால் அவனால் சம்பாதித்துக் கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் பாலனின் மனதில் இருந்துகொண்டே இருந்தது.

திடீரென்று வெளியூர் சென்று சம்பாதிக்க வேண்டுமென்று யோசனை மனதில் உதித்தது. ஆனால் அம்மாவை எப்படி விட்டுவிட்டு செல்வது என்று மிகவும் யோசித்தான்.

பிறகு போக மனமில்லாமல் அந்த நகரத்திலேயே இருந்துவிட்டான்.
அவனுக்கு ஒரே ஒரு நண்பண் இருந்தான். அவனுடைய பெயர் மதன் இருந்தாலும் பாலன் பெரும்பாலான நேரத்தைத் தனிமையிலேயே கழித்தான்.

ஒருநாள் காலையில் மதனின் தங்கை பானு, பாலனைப் பார்த்து, வேலைக்குப் போகத் தெரியாத ஜடம் என்று கேலி செய்தாள்.

இதைக்கேட்ட மதன், அவனுடைய கால் ஊனமாக இருந்தாலும் அவனது மனமும் நட்பும் ஊனமில்லை. இதெல்லாம் உனக்கு எங்கே புரியப் போகிறது? என்று பானுவை கடிந்து கொண்டான்.

மறுநாள் காலை, பாலன் அந்த நகரத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு சென்றான், அங்கே பலவித கார்கள் நிற்பதைப் பார்த்தான்.

அவற்றைப் பார்த்தவுடன் அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. வீட்டுக்குச் சென்று ஒரு அட்டையை எடுத்து அதில் இங்கே வண்டிகள் சுத்தம் செய்து தரப்படும் என்று எழுதினான்.

அந்த அட்டையை எடுத்துக் கொண்டு வந்து பேருந்து நிலையத்திலிருந்த ஒரு கம்பத்தில் தொங்கவிட்டான். சிலர் வண்டிகளை அந்த பக்கமாக நிறுத்திவிட்டு கடைகளுக்குச் சென்றனர்.

அவர்கள் திரும்பி வருவதற்குள் அந்த வண்டிகளை மதனின் உதவியோடு பாலன் நன்றாக துடைத்து சுத்தம் செய்து வைத்தான்.
வண்டிகளை நிறுத்திவிட்டுச் சென்றவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது, தங்கள் வண்டிகள் சுத்தமாகத் துடைக்கப்பட்டு பளிச்சென்று நிற்பதைப் பார்த்து வியந்து போனார்கள்.

அங்கு நின்றுக் கொண்டிருந்த மதனைப் பார்த்து, தம்பி இந்த வண்டிகளை யார் துடைத்தது? என்று கேட்டனர். அதற்கு மதன், என் நண்பன் பாலன் தான் உங்களது வண்டிகளைக் கஷ்டப்பட்டு துடைத்து வைத்தான் என்றான்.

அதைகேட்ட அந்த மனிதர்கள் பாலனைப் பார்த்து, தம்பி உன் கால் ஊனமாக இருந்தாலும் உன் மனதும் உன் நல்ல நட்பும் ஊனமில்லை. என்று கூறியபடியே, அவர்களுக்கு ஆளுக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தார்கள்.

இதைபோல தொடர்ந்து செய்யவே பாலனுக்குத் தேவையான பணம் கிடைக்க ஆரம்பித்தது. தனது தாயை இனிமேல் கஷ்டப்படாமல் காப்பாற்றலாம் என்று நினைத்துக் கொண்டான்.

6 மாதங்களுக்கு பிறகு ஒரு பேங்க் மேனேஜர் உதவியுடன் வாடகைக்கு இடம் வாங்கி Car cleaning garage என்ற சிறிய கடையை ஆரம்பித்தார்.

4 ஆண்டுகளில் அதே இடத்தை சொந்தமாக வாங்கி பாலன் Car Decor என்று கார் சாதன பொருட்கள் விற்கும் கடையாக்கி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

தன்னை இழிவாக பேசிய பானுவின் கண்களுக்கு முன்னால் விலையுயர்ந்த Audi காரில் வந்து இறங்கினான் பாலன்.

இது என்னுடைய Showroom தான் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான் பாலன். பானு வாயடைத்து போய் நின்றாள்.

இன்றைக்கும் உன் முயற்சியை நிறுத்தாமல் ஓடினால் உன் ஊனம் கூட உன்னை தடுக்க முடியாது! ஆமென்!

#சங்கீதம் 18:29
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!