கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பிரித்தானியா..
ஒருபோதும் இல்லாத அளவு பிரித்தானியா பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக பிரித்தானியாவின் பேங்க் ஒப் இங்கிலாந்து எச்சரித்துள்ளது. இதன் காரணமாக இரண்டு வருடங்களுக்கு கடுமையான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரியவருகிறது.
வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை சுமார் 6.4 விகிதம் கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தற்பொழுது வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 3.5 ஆக உள்ளது.
சில மாதாந்த வீட்டுக்கடன் அளவு £3000 பவுண்டுகளுக்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது அடிப்படை வட்டிவிகிதமானது .075 ஆல் வயத்தப்பட்டு 3 விகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை வீட்டுக்கடன் வங்கிகள் 5.5% இல் இருந்து 6% விகிதம் வட்டியுடன் வங்கிகள் தற்பொழுது வழங்கி வருகிறது. இது மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தற்பொழுது பிக்ஸ் ரேட் செலுத்துபவர்கள் அந்த கால அளவு முடியும் பொழுது அதிக அளவிலான வட்டியை செலுத்த வேண்டும்.