ஐரோப்பிய நாடுகளில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்

Nila
2 years ago
ஐரோப்பிய நாடுகளில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்

ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனையை திறம்பட தடை செய்யும் சட்டத்தின் படி புதிய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 2035ஆம் ஆண்டு முதல், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனையை திறம்பட தடை செய்யும் சட்டத்தின் படி புதிய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

மின்சார வாகனங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்தவும், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. 

இந்த ஒப்பந்தத்திற்கமைய, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கார் தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரிக்கும் வாகனங்களில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைட் வாயு வெளியேற்றத்தை 2035க்குள் 100 சதவீதம் குறைக்க வேண்டும்.

அதாவது 2035ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை முற்றிலும் இல்லாமல் சாத்தியமாக்கும் இலக்கை அடைய வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

அதேபோல, 2030ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் கார்களில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைட் வாயு வெளியேற்றத்தை 55 சதவீதம் அளவுக்கு குறைக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டனர். 

இதன்மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 27 நாடுகளிலும் 2035ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் மூலம் இயக்கப்படும் கார்கள் விற்பனை முடிவுக்கு வரும். 

புதிய சட்டங்களை உருவாக்கும் ஐரோப்பிய ஆணையம், மற்றும் அந்த சட்டங்களை அங்கீகரிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தின் படி செயல்பட தீர்மானித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!