முட்டை விலை அதிகரிக்கப்படவில்லை-நுகர்வோர் விவகார அதிகார சபை

Kanimoli
3 years ago
முட்டை விலை அதிகரிக்கப்படவில்லை-நுகர்வோர் விவகார அதிகார சபை

முட்டை விலை அதிகரிக்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

முட்டை விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

அதிகரித்த விலைக்கு முட்டையை விற்பனை செய்பவர்களை அடையாளம் காண்பதற்கான சுற்றிவளைப்புக்கள் தொடர்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

முட்டை விலையை குறைக்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

முட்டை ஒன்றின் விலையை 7 ரூபாவுக்கும், 10 ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவில் குறைக்க முடியும் எனவும் அவர் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பண்ணைகளில் முட்டை ஒன்றை 45 ரூபாவுக்கு விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த விலையை விடவும் அதிக விலைகளுக்கு முட்டைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

சகல பொருட்களின் விலைகளும் சற்று குறைவடைந்து வரும் நிலையில், முட்டையை விலை குறைத்து விற்பனை செய்ய முடியும்.
இவ்வாறான நிலையில் வர்த்தகர்கள் முட்டையின் விலையை கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.    

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4