பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், ரோயல் பிரிட்டிஷ் லெஜியனின் (RBL) வருடாந்திர பாப்பி அப்பீலுக்கு நிதி சேகரிக்க இராணுவ உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர் ஸ்டீபன் லு ரூக்ஸுடன் இணைந்துகொண்டார்.
இதன்படி, பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இன்று காலை 8 மணிக்கு tube stationஐ அடைந்தார் சிறிது நேரத் தோற்றத்தின் போது, அவர் பொதுமக்களிடம் பேசிக் கொண்டிருப்பதையும், பாப்பிகள் நிறைந்த ஒரு தட்டை வைத்திருந்ததையும் காண முடிந்தது.
பயனர் ஒருவர் ரிஷி சுனக்கிடம் இருந்து பாப்பியை வாங்கும் காணொளிளை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.ரிஷியிடம் இருந்து எனது பாப்பியை வாங்கி ரசீது கேட்டேன் என்ற தலைப்புடன் அவர் பகிர்ந்துள்ளார்.
காலை நெரிசல் நேரத்தில் எங்களுடன் கூட்டிச் செல்வதற்கு தாராளமாக நேரத்தை ஒதுக்கியதற்காக பிரதமருக்கு தாங்கள் நன்றி கூறுகிறோம் என RBL தெரிவித்துள்ளது.மற்றவர்களும் பிரதமரின் தோற்றம் குறித்து தங்களின் ஆச்சரியத்தை விரைவாகப் பகிர்ந்து கொண்டனர் என்று டெலிகிராப் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் லண்டன் பாப்பி தினத்தின் போது ராயல் பிரிட்டிஷ் லெஜியன் 1 மில்லியன் பவுண்டுகளை திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.