நிறுவனத்தை வாங்கியதில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை இழந்த ட்விட்டர் - தரவு நிறுவனம் அறிக்கை

Prasu
2 years ago
நிறுவனத்தை வாங்கியதில் இருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை இழந்த ட்விட்டர் - தரவு நிறுவனம் அறிக்கை

புதிய உரிமையாளரான எலோன் மஸ்க் தொழில்நுட்ப நிறுவனத்தை $44 பில்லியனுக்கு கொள்வனவு செய்ததில்  இருந்து ட்விட்டர் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை இழந்திருக்கலாம் என்று தரவு நிறுவனம் ஒன்று  கண்டறிந்துள்ளது, சில பயனர்கள் நிறுவனத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் எலோன் மஸ்க்,  நிறுவனத்தை கொள்வனவு செய்தமைக்கு காட்டிய எதிர்ப்பின் காரணமாக நீங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Bot Sentinel நிறுவனம், 3.1 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் மற்றும் அவற்றின் தினசரி செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் தவறான Twitter நடத்தையை கண்காணித்து வருகிறது.

இதன்படி, ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 1 க்கு இடையில்  877,000 கணக்குகள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் மேலும் 497,000 கணக்குகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் Bot Sentinel நம்புகிறது, இது வழக்கமான எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.

'மக்கள் தங்கள் கணக்குகளை செயலிழக்கச் செய்வதையும், ட்விட்டர் கணக்குகளை இடைநிறுத்துவதையும் நாங்கள் அவதானித்துள்ளோம்' என்று பாட் சென்டினலின் நிறுவனர் கிறிஸ்டோபர் பௌஸி கூறியுள்ளார்.

ட்விட்டரில் தற்போது சுமார் 237 மில்லியன் 'பயனர்கள்' உள்ளனர் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில், ஒக்டோபர் 24 முதல் அக்டோபர் 31 வரை, கடந்த வாரத்தில், 'ட்விட்டரை எப்படி நீக்குவது' என்ற தேடல்கள் 500 சதவீதம் அதிகரித்துள்ளதாக, பாதுகாப்பு நிறுவனமான VPNOverview கண்டறிந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!