ஒரு சவரன் ரூ.37,720 ஆகவும் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.4,715 ஆக விற்பனை

Kanimoli
1 year ago
ஒரு சவரன் ரூ.37,720 ஆகவும் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.4,715 ஆக விற்பனை

   தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்றைய நாள் முடிவில் ஒரு சவரன் ரூ.37,720 ஆகவும் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.4,715 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்றும் தொடர்ந்து 2வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 குறைந்து ரூ.37,648 ஆக விற்பனையாகிறது.

22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 9 குறைந்து ரூ.4,706 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.40,864 ஆகவும் ஒரு கிராம் ரூ.5,108 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.64 ஆக விற்பனையாகிறது.

இதன் காரணமாக பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.64,000ஆக விற்பனையாகிறது.