தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதை மாத்திரைகள் சுங்கத் திணைக்களத்தின் தபால் மதிப்பீட்டுப் பிரிவினால் கைப்பற்றல்

Prabha Praneetha
3 years ago
தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதை மாத்திரைகள் சுங்கத் திணைக்களத்தின் தபால் மதிப்பீட்டுப் பிரிவினால் கைப்பற்றல்

வெளிநாட்டிலிருந்து தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 2,387 கிராம் நிறையுடைய 4,956 போதை மாத்திரைகள் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தபால் மதிப்பீட்டுப் பிரிவினால் கைப்பட்டப்பட்டுள்ளது.

தபால் மதிப்பீட்டுப் பிரிவில் கடமையாற்றும், வெளிநாட்டிலிருந்து தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படும் பொதிகளை பரிசோதிக்கும் உதவி சுங்க அத்தியட்சகருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் வெளிநாட்டு தபால் பொதி ஒன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

குறிப்பிட்ட இந்த பொதி கார்ட்போட் பெட்டியொன்றில் பொதியிடப்பட்டிருந்தது. அப்பொதி ஜேர்மனியில் இருந்து அங்கொட பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இதில் தனிப்பட்ட பொருட்கள் அடங்கியிருப்பதாக பொதி தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த போதை மாத்திரைகள் இலங்கை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4