சிங்கப்பூரில் மனைவிகளுக்கு போதை மருந்தளித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த 4 கணவர்கள்

#Sexual Abuse
Prasu
1 year ago
சிங்கப்பூரில் மனைவிகளுக்கு போதை மருந்தளித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த 4 கணவர்கள்

சிங்கப்பூர் நாட்டில் நான்கு நண்பர்கள் தங்களை மனைவிகளை போதை மருந்தளித்து கூட்டு துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய வழக்கில் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பெண் ஒருவர் சுய நினைவிழந்த நிலையில் குறைந்தது 7 ஆண்டு காலம் பலமுறை பலரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், பெண் ஒருவர் தமது நிர்வாண படங்கள் தமது கணவரின் மொபைல் சேட் பகுதியில் காணப்பட குறித்த அதிர்ச்சி பின்னணி அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து, தொடர்புடைய நான்கு நண்பர்களும் கைது செய்யப்பட்டு, தற்போது பல்வேறு பிரிவுகளில் வழக்கை எதிர்கொள்கின்றனர். இந்த விவகாரத்திற்கு மூல காரணம் 41 வயதான J என்பவர் என்றே கூறப்படுகிறது.2008ல் திருமணம் செய்து கொண்ட இவர் நான்கு பிள்ளைகளுக்கு தந்தை. 2010ல் இருந்தே ஒரு ஆபாச இணைய பக்கத்தில் தமது கற்பனைகளை சேட் செய்து வந்துள்ளார். மேலும், ஒருகட்டத்தில் ஜெ. தமது மனைவியிடம் தனது ஆசையை கூற, அவர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அவரது ஒப்புதல் இன்றி, அவருக்கு போதை மருந்தளித்து தமது நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கியுள்ளார். இந்த நிலையில், 44 வயதான K என்பவரின் அறிமுகம் கிடைக்க ஜெ. தனது திட்டத்தை அவரிடம் கூறியுள்ளார்.இதில் இருவரும் தங்கள் மனைவிகளை மாற்றி போதை மருந்தளித்து துஸ்பிரயோகம் செய்துள்ளனர். மட்டுமின்றி, ஜெ. தனது படுக்கையறையில் கமெரா ஒன்றை பொருத்தி, நடந்த சம்பவங்களை தமது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.

ஜெ. மட்டுமின்றி அவரது புதிய நண்பரான கெ. தமது படுக்கை அறையிலும் ரகசிய கமெரா பொருத்தியுள்ளார். 2020 ஜனவரி மாதம் ஜெ. தூக்கத்தில் இருந்த நேரம் அவரது மொபைலில் சேமிக்கப்பட்டிருந்த காணொளி ஒன்றை காண நேர்ந்ததுடன், ஜெ. மற்றும் கெ. ஆகிய இருவரும் பேசிக் கொண்டதும் அவரது மனைவி கேட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ஜெ.வின் மனைவி தமது கணவருடன் கெ. குடியிருப்புக்கு சென்று, அவரது மொபைலில் பதிவாகியிருந்த காணொளியை நீக்க கோரியுள்ளார். 

மட்டுமின்றி, ஜெ. மனைவி தமக்கு நேர்ந்த துயரத்தை பொலிஸாரிடம் புகாராக அளித்துள்ளார்.இந்த வழக்கில், இணையவழி நண்பர்களான M,L,மற்றும் N. ஆகியோரும் சிக்கியுள்ளனர். 

மேலும், K, M, L மற்றும் N ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் நிரூபணமான நிலையில், இவர்களுக்கு 19 முதல் 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அரசு தரப்பு நீதிமன்றத்தை கோரியுள்ளது.மட்டுமின்றி, K மற்றும் M ஆகியோருக்கு தலா 24 பிரம்படி வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். Lஎன்பவருக்கு 11 முதல் 16.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க கோரியுள்ளனர். Nஎன்பவருக்கு 17 முதல் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் கோரியுள்ளனர்.இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில்வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.