பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்தும் கொலைகள்- இளம் பெண்ணை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த நபர்

Nila
2 years ago
பிரான்ஸில் பரபரப்பை ஏற்படுத்தும்  கொலைகள்- இளம் பெண்ணை கொலை செய்து தோட்டத்தில் புதைத்த நபர்

பிரான்ஸில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோலா எனும் 12 வயதுச் சிறுமி பாரிசில் கொல்லப்பட்ட பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில், மற்றுமொரு கொலை வழக்கு மொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.பிரான்சின் மத்திய மாவட்டமான Corrèze இல் உள்ள  Brive-la-Gaillarde எனும் சிறு கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

3 நாட்களாக இந்த பெண் காணாமல் போயிருந்த நிலையில் தேடப்பட்டு வந்துள்ளார். அதற்கமைய, அவரை கண்டுபிடித்து தருமாறு பொலிஸாரிடம் பெற்றோர் கேட்டுக் கொண்டனர்.இந்த நிலை பொலிஸார் பெண்ணை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதற்கமைய,  தோட்டம் ஒன்றில் இருந்து பெண் ஒருவரது சடலத்தை பொலிஸார் தோண்டி எடுத்தனர். 

21 வயதுடைய Justine Vayrac எனும் பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது. அப்பெண் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் அங்குள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றில் புதைக்கப்பட்டார் என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய Lucas L எனும் நபரை பிரெஞ்சு பொலிஸார் கைது செய்தனர். குறித்த நபரே அப்பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் மேற்கொண்டு கொலை செய்துள்ளமை உடற்கூறு பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்திலேயே அப்பெண்ணின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது.

குறித்த Justine Vayrac எனும் பெண் அவரது வீட்டு வாகனத் தரிப்பிடத்தில் வைத்து கடத்தப்பட்டார். பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!