இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இலங்கை நிலைமை குறித்து விவாதம் !
இலங்கையின் நிலைமை குறித்து அடுத்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றம் விவாதிக்க உள்ளது.இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமைக்கான பிரித்தானியாவின் பதில் குறித்த பின்வரிசை வணிகக் குழுவின் விவாதம் எதிர்வரும் 9 நவம்பர் 2022 புதன்கிழமை அன்று பொதுச்சபையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பின்வரிசை உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பமான விவாதங்களை முன்வைக்க, பின்வரிசை வணிகக் குழு வாய்ப்புகளை வழங்குகிறது.
முன்னதாக கடந்த ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வின்போது பிரித்தானியாவின் தலைமையிலான இலங்கை தொடர்பான முக்கிய குழுவே, இலங்கைக்கு எதிரான யோசனையை முன்னகர்த்தி அதனை நிறைவேற்றியது.
இதன்படி இலங்கையின் போர் குற்றம் தொடர்பான பொறுப்புக்கூறல் உள்நாட்டில் இருந்து சர்வதேசத்தின் கைகளுக்கு செல்கிறது.
எனினும் இதனை இலங்கை கடுமையாக ஆட்சேபித்து வருகிறது.