வாக்கெடுப்பு முடியும் வரை அமைச்சரவையை மாற்றியமைப்பதில்லை- ஜனாதிபதி

Prabha Praneetha
3 years ago
வாக்கெடுப்பு முடியும் வரை அமைச்சரவையை மாற்றியமைப்பதில்லை- ஜனாதிபதி

வரவு செலவுத் திட்ட விவாதம் மற்றும் வாக்கெடுப்பு முடியும் வரை அமைச்சரவையை மாற்றியமைப்பதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையை மாற்றி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட பொதுஜன பெரமுன குழுவினருக்கு அமைச்சு பதவி வழங்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நியமிக்கவில்லை என்றால் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்படும் என குழுவினர் அச்சுறுத்தும் வகையில் கூறியமையினால் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் அமைச்சரவை தொடர்பில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4