உறங்கிக் கொண்டிருந்தபோது மகனை கோடரியால் தாக்கிக் கொன்ற தந்தை

Mayoorikka
3 years ago
உறங்கிக் கொண்டிருந்தபோது மகனை கோடரியால் தாக்கிக் கொன்ற தந்தை

குருநாகல் ரிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடலுபொல பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகனைக் கொலை செய்துள்ளதாக ரிதிகம பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை குறித்த கொலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த 29 வயதுடைய நபர் உறங்கிக் கொண்டிருந்தபோது, குறித்த இளைஞரின் தந்தை தனது மகனை கோடரியால் தாக்கிக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், பெற்றோரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதையடுத்து குறித்த தந்தை பொலிஸில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ரிதிகம பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4