40 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொலையை ஒப்புக்கொண்ட பிரித்தானியருக்கு ஆயுள் தண்டனை

Nila
1 year ago
 40 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொலையை ஒப்புக்கொண்ட பிரித்தானியருக்கு ஆயுள் தண்டனை

பிரித்தானியாவில் காவல் நிலையம் சென்ற நபர் 40 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொலையை ஒப்புக்கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதனையடுத்து, 61 வயதான ஜான் பால் கைது செய்யப்பட்டு, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1980 ஜூன் மாதம் ஆன்றணி பேர்ட் என்பவரை ஜான் பால் கொலை செய்துள்ளார். மேற்கு லண்டனில் உள்ள கென்சிங்டன் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் 41 வயதான ஆன்றணி சடலமாக மீட்கப்பட்டார்.பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், அவர் உடலில் காயங்கள் காணப்பட்டதுடன், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரது குடியிருப்பு சூறையாடப்பட்டு, மின்சாதன பொருட்கள் மற்றும் மதுவும் திருடப்பட்டிருந்தது.

கொலை வழக்கு பதியப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டாலும், துப்புத்துலங்காமல் பொலிஸாசார் குழம்பினர். பல கட்டமாக பொலிஸார் விசாரணை முன்னெடுத்தும், 41 ஆண்டுகளாக கொலையாளி சிக்கவில்லை.இந்த நிலையில் 2022 மே மாதம் 5ம் திகதி ஹேமர்ஸ்மித் காவல் நிலையத்திற்குள் நுழைந்த பால், தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர் மீது கொலை வழக்கும் பின்னர் பதியப்பட்டது.

ஆனால், அவர் மீதான கொலை வழக்கை பொலிஸாரால் உறுதி செய்ய முடியாமல் போகவே, நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தொடர்ந்து அக்டோபர் 24ம் திகதி அவர் மீதான கொலை வழக்கு நிரூபிக்கப்பட்டதுடன், குறைந்தபட்ச தண்டனையாக 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொள்ளையிடும் நோக்கத்துடன் மட்டுமே ஆன்றணியின் குடியிருப்புக்கு சென்றதாகவும், ஆனால் ஒருகட்டத்தில் தடியால் அவரை தாக்கும் நிலை ஏற்பட்டதாகவும், அதில் அவர் நினைவிழந்துள்ளதாகவும் ஜான் பால் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.மேலும், சம்பவம் நடந்த இரவு இரண்டாவது முறையாக வந்து ஆன்றணியின் உடமைகளை கொள்ளையிட்டு சென்றதாக ஜான் பால் குறிப்பிட்டுள்ளார்.