தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறைக் கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குல்

Kanimoli
3 years ago
 தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறைக் கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குல்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறைக் கும்பல் ஒன்று வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

அச்சுவேலி, பத்தமேனி பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் சிந்துஜன் என்பவர் மீதே வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர், விடுதியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளை இன்று அதிகாலை 5 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய வன்முறைக் கும்பலே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4