உக்ரைன் மீது அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டத்தை ரஷ்யா மொத்தமாக கைவிட வேண்டும்-ஜி ஜின்பிங் எச்சரிக்கை
Prasu
2 years ago
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz-ஐ கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி திரும்ப பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நிலைமைகளை சர்வதேச சமூகம் உருவாக்க வேண்டும்.
இதனை அடுத்து அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தலை எதிர்க்க வேண்டும் என ஜி ஜின்பிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக தெரிவான ஜி ஜின்பிங்கை சந்திக்கும் முதல் மேற்கத்திய தலைவரான சேன்ஸலர் Olaf Scholz, பொதுமக்களைக் கொன்று நகரங்களை அழிக்கும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர புடினுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையிலேயே, அணு ஆயுத பயன்பாட்டை கைவிட வேண்டும் என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.