சீனாவில் முடக்க நிலையால் 3 வயதுச் சிறுவன் பரிதாப மரணம் - மன்னிப்பு கோரிய அதிகாரிகள்

Prasu
2 years ago
சீனாவில் முடக்க நிலையால் 3 வயதுச் சிறுவன் பரிதாப மரணம் - மன்னிப்பு கோரிய அதிகாரிகள்

சீனாவில் முடக்கநிலை காரணமாக மருத்துவ அவசர உதவி தாமதமடைந்ததில், 3 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு, வட்டாரத்தின் சுகாதார அதிகாரிகள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த முதலாம் திகதி லான்சோ (Lanzhou) நகரில் இடம்பெற்றுள்ளது.

Carbon monoxide நச்சு வாயுவைச் சுவாசித்த 3 வயது மகனை, மருத்துவமனையில் சேர்க்க அவரது தந்தை அவசரக்கால நேரடித் தொலைபேசி எண்ணுக்குப் பலமுறை அழைத்தார்.

ஒரு மாதமாக முடக்கநிலையில் இருந்த நகருக்கு, அவசர உதவி வாகனத்தை அனுப்ப ஒன்றரை மணி நேரம் பிடித்தது.

உதவி கிடைப்பது தாமதமானதால் பொறுமையிழந்த தந்தை, வட்டாரத்தை விட்டு வெளியேறச் சோதனைச் சாவடி அதிகாரிகளிடம் மன்றாடினார். அதிகாரிகள் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை.

தந்தை, பின்னர் சோதனைச் சாவடியை பலவந்தமாகக் கடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

வட்டாரத்திற்கு வெளியே இருந்த வாடகை வாகனத்தில் ஏறிய அவர், மகனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். எப்படியிருப்பினும் மகன் உயிர் பிழைக்கவில்லை.

துக்கச் சம்பவத்தைக் குறித்து, துவோ என்னும் பெயருள்ள அந்தத் தந்தை, சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டதை அடுத்து இணையவாசிகள் பலர் சினமடைந்துள்ளனர்.

சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட வட்டார அதிகாரிகள் தவற்றைத் திருத்திக்கொள்ள உறுதிகூறினர்.

சம்பவம் அவசரகால மீட்புப் பணி நடைமுறையில் உள்ள பலவீனங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது, என்று அவர்கள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!