தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் சிறுவர்கள்

Prabha Praneetha
3 years ago
தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் சிறுவர்கள்

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகமோசமாகப் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியப்பிராந்திய இணை அலுவலகத்தின் தலைவர் மிஹிகோ டனகா இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

கைத்தொழில் அமைச்சில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே மிஹிகோ டனகா இவ்வாறு எச்சரித்துள்ளார்.

இவ்வாறானதொரு அச்சுறுத்தல் நிலைக்கு மத்தியில் பெண்களால் முன்னெடுக்கப்படும் சிறியளவிலான முயற்சியாண்மைகள் மற்றும் வணிக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் குடும்பங்களிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களை இந்த நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதற்கான சாத்தியப்பாட்டை அதிகரிக்கமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4