'இந்தியாவின் முதல் வாக்காளர்' என்று அழைக்கப்படும் பொதுமகன் தமது 105 வயதில் மரணமானார்
இந்தியாவின் 1952 பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக வாக்களித்த ஷியாம் சரண் நேகி என்பவேரே காலமானார். கருதப்படுகிறது
பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியா தனது முதல் பொதுத் தேர்தலை நடத்தியபோது இவரே முதலாவதாக வாக்களித்துள்ளார்.
அன்றில் இருந்து நேகி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்துள்ளார்.
நூறு வயதை எட்டியுள்ள அவர்இ இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலில், நேற்று சனிக்கிழமை இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் வாக்களித்தார்.
2014 ஆம் ஆண்டில், நேகி வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முயற்சியில் தேர்தல் ஆணையத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார்.
அத்துடன் அந்த ஆண்டின் பொதுத் தேர்தலில் வாக்களிக்க மக்களை ஊக்குவிக்கும் கூகுள் காணொளியிலும் நடித்தார்.
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடிஇ நேகிக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவரது உடல் கல்பாவில் உள்ள அவரது கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.