பிரித்தானியாவின் முதல் ஆசிய நாட்டு பிரதமரான ரிஷி சுனக் பகிர்ந்து கொண்ட முக்கிய தகவல்கள்

Nila
1 year ago
பிரித்தானியாவின் முதல் ஆசிய நாட்டு பிரதமரான ரிஷி சுனக்  பகிர்ந்து கொண்ட முக்கிய தகவல்கள்

பிரித்தானியாவில் பிரதமராகக் கடந்த செப்டெம்பர் மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ் எடுத்து சில நடவடிக்கைகள் அந்நாட்டின் பொருளாதாரத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனால் உட்கட்சியிலேயே எதிர்ப்பு அதிகரித்ததால் அவர் வெறு வழியின்றி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்தி வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமரானார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானிய பிரதமராவது இதுவே முதல்முறையாகும்.பிரித்தானிய பொருளாதாரம் இப்போது இக்கட்டான சூழலில் உள்ள நிலையில், அதை மீட்கும் நடவடிக்கையில் அவர் இறங்கி உள்ளார். தொடக்கம் முதலே அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் ரிஷி சுனக், பல துறைகளுக்கு அமைச்சர்களை மாற்றினார். 

அதேநேரம் பிரித்தானியாவில் முதல் இந்து பிரமதர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். தான் இந்து என்பதை எப்போதும் பெருமையாகச் சொல்லும் ரிஷி சுனக், தான் பிரதமர் பதவிக்கு வருவது பிரித்தானியாவின் பன்முகத்தன்மையைக் காட்டுவதாகத் தெரிவித்து உள்ளார். 

42 வயதான ரிஷி சுனக், கடந்த மாதம் பிரதமர் பதவிக்குத் தேர்தல் நடந்த போது போரிஸ் ஜேன்சன் தன்னை விட்டுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் ரிஷி சுனக் கூறுகையில், போரிஸ் ஜோன்சன் கடந்த வாரம் என்னிடம் வந்து பேசினார். இருப்பினும், நிதியமைச்சராக இருந்த போது எனது செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதை நான் விளக்கினேன். பிரித்தானியாவில் இப்போது விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் இன்னலை எதிர்கொண்டுள்ள நிலையில், இப்போது நாட்டை வழிநடத்தச் சரியான நபராக நான் இருப்பேன் என்பதை அவரிடம் விளக்கினேன்.

இப்போது பிரித்தானியாவின் பிரதமராக நான் இருக்கிறேன். இங்குப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இப்போது நான் தீபாவளி கொண்டாட நிகழ்ச்சியை நடத்துகிறோம்.இதை நினைத்தால் அற்புதமாக உள்ளது. 

இந்து என்பதில் எனக்குப் பெருமை. இது இங்குள்ள பலருக்கும் பெரும் நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்து உள்ளது. பிறமதாராகத் தீபாவளி பண்டிகையில் தீபங்களை ஏற்றுவது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தான் தருகிறது.

பிரித்தானியாவில் எதுவும் சாத்தியம் என்பதையே இது காட்டுகிறது. இங்கு எதுவும் பெரிய விஷயம் இல்லை. நாடு முழுவதும் இதை நினைத்து நிச்சயம் பெருமை கொள்ளும் என்றே நான் நினைக்கிறேன். இந்த கொண்டாட்டம் ஒரு பக்கம் என்றால் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கை அதிகம் இருக்கிறது. பிரித்தானியாவில் பொருளாதாரம் இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. அதைச் சரி செய்ய விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

போரிஸ் ஜான்சன் என்னிடம் வந்து பேசினார். ஆனால், எனக்கு ஆதரவு எந்தளவுக்கு உள்ளது என்பதை நான் அவரிடம் விளக்கினேன். மேலும், இப்போது அதிகரிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நான் சரியான நபராக இருப்பேன். வரும் காலத்தில் நிச்சயம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும் என்றார். முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸை வெளிப்படையாக விமர்சிப்பதைத் தவிர்த்த ரிஷி சுனக், முந்தைய தவறுகளைச் சரி செய்வேன் என மட்டும் தெரிவித்தார்.

ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். அவர் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியைத் தான் திருமணம் செய்துள்ளார். தான் இந்து என்பதில் பெருமை கொள்வதாக ரிஷி சுனக் பல முறை கூறியுள்ளார். அங்குள்ள இஸ்கான் கோயிலுக்கும் அடிக்கடி செல்லும் அவர், சில மாதங்களுக்கு முன் பசு பூஜையும் செய்தது குறிப்பிடத்தக்கது.