ஆஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் தாய் மற்றும் 2 பிள்ளைகள் மரணத்தில் தொடரும் மர்மம்...

Nila
2 years ago
ஆஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் தாய் மற்றும் 2 பிள்ளைகள் மரணத்தில் தொடரும் மர்மம்...

அவுஸ்திரேலியா கன்பராவில் அமைந்துள்ள குளம் ஒன்றில் இருந்து தமிழ் குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் இரண்டு மகன்மார் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக தாயினதும் ஒரு மகனினதும் சடலங்கள் நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டன. எனினும் மற்ற  ஒரு மகனான 8 அகவைக் கொண்ட பிரணவ் விவேகானந்தன் காணாமல் போயிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அவரின் உடலமும் குளத்தில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த தமிழ் குடும்பத்தின் மூவரதும் மரணங்கள் குறித்து தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.குறித்த மரணங்களுடன் வேறு எவருக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை கருதப்படவில்லை என அவுஸ்திரேலிய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!