சிறையில் அடைக்கப்பட்டார் தனுஷ்க குணதிலக்க

Prathees
3 years ago
சிறையில் அடைக்கப்பட்டார் தனுஷ்க குணதிலக்க

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று இரவு சிட்னியில் உள்ள சில்வர்வாட்டர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிட்னி கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29 வயதான யுவதியொருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பில் செய்த முறைப்பாட்டின் பேரில் இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்க நேற்று (06) அதிகாலை 01 மணியளவில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், தனுஷ்க குணதிலவுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தடை விதிக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் தனுஷ்க குணதிலக்கவை முதலில் அடையாளம் கண்டு, பின்னர் ரோஸ் பேயில் உள்ள தனது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குறித்த சிறுமி முறைப்பாடு செய்திருந்தார்.

சந்தேக நபரான தனுஷ்க குணதிலக்க தன்னை பல சந்தர்ப்பங்களில் தாக்கியதாகவும் முறைப்பாட்டாளர் குற்றம் சுமத்தியுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனுஷ்க குணதிலக்க சிட்னி நகர பொலிஸாரால் 04 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் பேரில் நேற்று பரமட்டா பொலிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதிலும், பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதன்படி, சிட்னியில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனுஷ்க குணதிலக்க, சிட்னி நகர பொலிஸாரால் இன்று இரண்டாவது தடவையாக காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக டவுனிங் சென்டர் பிராந்திய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வீடியோ தொழிநுட்பத்தின் மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான தனுஷ்கா சாம்பல் நிற டி-சர்ட் அணிந்திருந்ததாகவும், நீதிமன்றத்தின் முன் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் மட்டுமே அவர் பேசியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

தனுஷ்கவின் கைகளில் கைவிலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை மேலும் அவதானிக்கப்பட்டது.

இதன்படி, டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதவான் றொபர்ட் வில்லியம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​தனுஷ்க சார்பில் சட்டத்தரணி ஆனந்த அமர்நாத் பிணை கோரியிருந்தார்.

எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் அண்மைக்காலமாக கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் வெளிநாட்டவர் எனவும் தனுஷ்கவிற்கு பிணை வழங்க நீதவான் மறுத்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் உயர் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்யவுள்ளதாக தனுஷ்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4