தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் அனைத்து ஆடம்பர பொழுது போக்கு அம்சங்களும் கிராமம் ஒன்று கண்டு பிடிப்பு

Kanimoli
3 years ago
தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் அனைத்து ஆடம்பர பொழுது போக்கு அம்சங்களும் கிராமம் ஒன்று கண்டு பிடிப்பு

தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் அனைத்து ஆடம்பர பொழுது போக்கு அம்சங்களும் கிராமம் ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்த கிராமத்தின் பெயர் கூப்பர் பேடி. இந்த கிராமத்தில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500க்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு வீடுகள் மட்டுமின்றி, அலுவலகங்கள், வணிக வளாகங்கள், தேவாலயம், திரையரங்குகள், அருங்காட்சியம், பார் மற்றும் விடுதி என அனைத்தும் இங்கு காணப்படுகின்றது.

அதேவேளை, இந்த நிலத்தடி கிராமத்தில் இணைய வசதி கூட உள்ளதாம்.

ஒரு காலத்தில் இந்த கிராமம் பாலைவனமாக இருந்ததாகவும், இங்கு காலத்திற்கு ஏற்ப தட்ப வெப்பநிலை சரியாக இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.

பின்பு 1915ம் ஆண்டு சுரங்கப்பணி ஆரம்பிக்கப்பட்ட இந்த கிராமத்தில் பின்பு மக்கள் அதில் தங்க ஆரம்பித்துள்ளனர்.

தற்போது கோடை மற்றும் குளிர் காலங்களில் எந்தவாரு கஷ்டமும இல்லாமல் தட்ப வெப்பநிலை சீராக இருப்பதாக கூறப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4