இன்றைய வேத வசனம் 08.11.2022: மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்

Prathees
2 years ago
இன்றைய வேத வசனம் 08.11.2022: மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்

மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவனுடைய மனம் கர்த்தருக்கு விரோதமாக எரிச்சலடையும். (நீதிமொழிகள்.19:3).

வேதாகமத்தைப் போன்றதொரு மனோதத்துவநூல் வேறு எதுவும் இல்லை. எங்கும் காணக்கிடைக்காத, மனிதனின் கிரியைகளை குறித்த வெளிச்சத்தை வேதம் தருகின்றது.

எடுத்துக்காட்டாக  மேல் குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தில் ஒரு மனிதனைக் காண்கிறோம். 
அவனுடைய வழி தாறுமாறானது, அது அவனுடைய வாழ்வினை உடைத்துப் போட்டது.

ஆயினும் தன் குற்றத்தை, தன்தோளில் சுமப்பதை விடுத்து, கர்த்தர் முகமாகத் திருப்பி, தன் எரிச்சலைக் கொட்டுகிறான்.

இது பலருடைய வாழ்வில் எத்தனை உண்மைமாய் இருக்கிறது! தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அறிக்கைசெய்யும் பலர், பின்னர் கேவலமான பாலியல் குற்றங்களில் சிக்கிக்கொள்வதைக் காண்கிறோம்.
இது அவர்களுக்கு அவமானத்தையும், அவகீர்த்தியையும், பொருளாதாரக்குறைவையும் ஏற்படுத்துகிறது. என்றாலும் அவர்கள் மனம்திரும்புகிறார்களா? இல்லை. 

கிறிஸ்துவை எதிர்த்து நிற்கின்றனர். தாங்கள் செய்த விசவாச அறிக்கையை மறந்து போகின்றனர். நாத்தீக தீவிரவாதிகளாக மாறிவிடுகின்றனர்.

நாம் அறிந்திருப்பதற்கு அதிகமாகவே கிறிஸ்துவை மறுதலிக்கும் செய்கையின் வித்து ஒழுக்கக்கேட்டினில் தான் தொடங்குகிறது. 

யு. து. போலக் என்பவர் தான் சந்தித்த ஒரு இளைஞனைப்பற்றி இவ்வாறு கூறுகிறார், 
அந்த இளைஞன் வேதத்தைப் பற்றிய பலவிதமான தவறான கருத்துக்களை அனல்தெறிக்கக் பேசினான்.
அப்பொழுது யு.து போலக் அவனை நோக்கி, என்ன விதமான பாவத்தில் நீ ஈடுபட்டிருக்கிறாய்? என்ற வினவினார்.

இக் கேள்வியைச் சற்றும் எதிர்பாராத இளைஞன், மனமுடைந்தவனாகத் தனது வாழ்கையில் ஏற்பட்ட கேவலானதும் வெட்கக்கேடானதுமான பாவத்தைக் குறித்து அவரிடம் சொல்லி அழுதான்.

தன்னுடைய பாவ கிரியைகளின் விளைவாகவே, மனிதன் கர்த்தருக்கு விரோதமாகச் சினங்கொண்டு பொங்கி எழுகிறான்.

 இதனை று. கு. அடேனி என்பார், தேவன் அருவருக்கும் பாதக செய்கைகளைச் செய்துவிட்டு அதற்குக் காரணம் தேவனுடைய படைப்புகளே என்று குற்றப்படுத்திக் தப்பித்துக் கொள்ள நினைப்பது மனிதனின் மிருககுணம் என்று எழுதியுள்ளார்.

பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான் என்னும் கூற்று எத்தனை உண்மையாய் இருக்கிறது.
இதனை அப்போஸ்தலனாகிய பேதுரு கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து, …. கூறி நினைவுபடுத்துகிறார்.

தேவனுடைய சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்குவதும், தவறுவதும், பெரும்பாலும் ஒழுக்கக்கேட்டின் விளைவே என்னும் உண்மையை இது வெளிப்படுத்துகிறது.
பொதுவாக, மனிதர்கள் தங்களுடைய பாவத்தை விட்டுவிட மறுக்கின்றனர். அதனோடு தொடர்ந்து செய்வதிலேயே நாட்டங்கொண்டிருக்கின்றனர்.

மேலும், அவர்களுடைய மாமிசம் இயற்கையாகவே தேவனிடத்தில் வெறுப்புக்கொண்டிருக்கிறது.
தேவனுடைய வார்த்தை இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. வேதம் பாவத்தைத் உணர செய்கிறது. எனவே, இவற்றை மனிதன் விரும்புவதில்லை, எதிர்த்து நிற்கின்றான்.

வேதம் சொல்கிறது:-
தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. (#யோவான் 3:20). ஆமென்! அல்லேலூயா!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!