அதிர்ச்சியூட்டும் சூப்பர் கம்ப்யூட்டரின் கணிப்பு 2050ஆம் ஆண்டு அளவில் உலகம் அழியப்போகிறது.

#world_news
Nila
1 year ago
அதிர்ச்சியூட்டும் சூப்பர் கம்ப்யூட்டரின் கணிப்பு 2050ஆம் ஆண்டு அளவில் உலகம் அழியப்போகிறது.

சூப்பர் கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் இயந்திரம் ஒன்று, 2050ஆம் ஆண்டு அளவில் உலகம் அழியப்போவதாக கணித்துள்ளது.

இதே கருத்துக்களை வானியல் வல்லுநரான Martin Rees என்பவரும் ஆதரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

1973ஆம் ஆண்டு பல பல்கலைப் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் என்னும் இந்த இயந்திரத்தால் கணிக்கப்பட்ட சில விடயங்கள் ஏற்கனவே பலித்துவருவதாக கூறப்படுகின்றது. 

உதாரணமாக, பூமியில் இயற்கை வளங்கள் மற்றும் முக்கிய தாதுக்கள் குறைந்துகொண்டே போவதை கூறலாம். இந்த இயந்திரத்தின் கணிப்புகள், பிறப்பு வீதம் முதல் மாசுபடுதல் வரையிலான பல்வேறு விடயங்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றன.

2020ஆம் ஆண்டளவில் பூமியின் நிலைமை மிகவும் இக்கட்டான நிலையாக இருக்கும் என அந்த இயந்திரம் கணித்திருந்தது. நாம் மாசுபடுதல் முதலான பிரச்சினைகள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருந்தோம் என்றால், வாழ்க்கைத்தரம் பூஜ்யமாகிவிடும் என்கிறது இந்த சூப்பர் கம்ப்யூட்டர்.

மாசுபடுதல் என்பது மிகவும் மோசமாகி, அது மனிதர்களை கொல்லத்துவங்கும், ஆகவே, மக்கள் தொகை குறையத் துவங்கும், அப்படியே 2040, 2050ஆம் ஆண்டளவில்  நாகரீக உலகம் என நாம் அழைக்கும் இந்த உலகம் அழிந்துபோய்விடும் என்கிறது சூப்பர் கம்ப்யூட்டர்.

துரதிர்ஷ்டவசமாக, இதே கருத்துக்களை வானியல் வல்லுநரான Martin Rees என்பவரும் ஆதரித்துள்ளார். ஆனாலும், மனித குலம் எதிர்நோக்கியிருக்கும் சவால்களை நம்மால் மேற்கொள்ளமுடியுமானால், நம்மால் நீண்ட காலம் வாழமுடியும் என்ற நம்பிக்கையூட்டும் செய்தியையும் தெரிவிக்கிறார் அவர்.