சர்வதேச கடற்பரப்பில் கைவிடப்பட்ட 303 இலங்கையர்கள் வியட்நாம் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

Prathees
1 year ago
சர்வதேச கடற்பரப்பில் கைவிடப்பட்ட 303 இலங்கையர்கள் வியட்நாம் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள் தற்போது வியட்நாம் தலைநகர் ஹனோயில் இருந்து 1800 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வங் தாவோ துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

லேடி ஆர் த்ரீ என்ற கப்பலில் இருந்து அவர்கள் மீட்கப்பட்டு அந்த துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக சர்வதேச குடியேற்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட கப்பலில் இருந்த 303 பேரும் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருபது சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட கப்பலில் இருந்த 303 பேரும் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருபது சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று குறித்த கப்பலில் இருந்த இலங்கையர் ஒருவர் கடற்படையினரை தொடர்பு கொண்டு தான் தங்கியிருந்த கப்பல் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

பின்னர், கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் இது தொடர்பாக சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, அவ்வழியாகச் சென்ற ஜப்பான் கப்பல் மூலம் இந்தக் கப்பலில் இருந்த இலங்கையர்கள் மீட்கப்பட்டனர்.

குறித்த கப்பலில் இவர்கள் இந்த நாட்டிலிருந்து மியான்மரில் இருந்து கனடாவிற்கு வேறு நாடுகளுக்கு பயணித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தையடுத்து கப்பலில் இருந்து ஊழியர்கள் வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வியட்நாமில் உள்ள இலங்கை தூதரகத்திடம் வினவியபோது, ​​இவர்களை வியட்நாமுக்கு அழைத்து வந்த பின்னர் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.