துருக்கியில் லாரி மீது பேருந்து மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு

#Accident #Death
Prasu
2 years ago
துருக்கியில் லாரி மீது பேருந்து மோதி விபத்து - 7 பேர் உயிரிழப்பு

கிழக்கு துருக்கியில் அக்ரி மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு அக்ரி மாகாணத்தில் நடந்த இந்த சம்பவத்தில் லாரி மீது பயணிகள் பேருந்து மோதி தீப்பிடித்தது. பயணிகள் சிலர் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு கீழே குதித்துத் தப்பினர். எனினும், பேருந்துக்குள் தீ வேகமாக பரவியதால், கீழே இறங்க முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்ட 7 பேர் உடல் கருகி பலியாகினர்.

துடாக் மாவட்டத்தில் ஏராளமான சுகாதார ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஜெண்டர்மேரி குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!