பாகிஸ்தானில் மீண்டும் தொடங்க இருந்த இம்ரான் கான் தலைமையிலான பேரணி ஒத்திவைப்பு

#Pakistan #ImranKhan
Prasu
2 years ago
பாகிஸ்தானில் மீண்டும் தொடங்க இருந்த இம்ரான் கான் தலைமையிலான பேரணி ஒத்திவைப்பு

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கடந்த வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மாகாணத்தின் வாஜிராபாத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்தபோது, அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

அதில் அவரது வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, காயமடைந்தார். இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள அவருக்கு சொந்தமான சவுக்கத் கானும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு நலமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் பைசல் சுல்தான் என்பவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். எனினும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

இந்நிலையில், "நான் சுடப்பட்ட அதே இடத்திலிருந்து வரும் செவ்வாய்கிழமை(நாளை) அன்று மீண்டும் பேரணி தொடரும்" என்று இம்ரான் கான் கூறினார்.

இதனிடையே, நாளை முதல் மீண்டும் தொடங்க இருந்த இம்ரான் கான் கட்சியினரின் பேரணி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை முதல் மீண்டும் பேரணி தொடரும் என்று இம்ரான் கானின் பிடிஐ கட்சி தலைவர்கள் கூறினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!