கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

Prabha Praneetha
3 years ago
கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

03 வருடங்களுக்குள் மேற்கு முனைய நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இந்தியாவின் அதானி குழுமம் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4