பிரித்தானிய மகாராணியார் மீது முட்டை தாக்குதல்
பிரித்தானியாவின் யோர்க் பகுதியில் இன்று பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் அவரது துணைவியரான ராணி கமீலா மீது முட்டைகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தால் மன்னர் அதிர்ச்சியடைவில்லையென்றாலும் அவருக்கு மிக அருகில் இந்த முட்டைகள் வீழ்ந்துள்ளன. முட்டைகளை வீசிய நபரை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைதுசெய்துள்ளனர்.
இன்று யோர்க்ப்குதியில் அண்மையில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியான தனது தாயின் சிலையை மன்னர் சார்லஸ் திறந்து வைத்தபின்னர் அங்குள்ள மக்களை சந்தித்தபோது இந்தசம்பவம் இடம்பெற்றிருந்தது.
6 அடியுள்ள இந்த சிலை கடந்த செப்டம்பர் மாதத்தில் திறக்கப்பட இருந்த நிலையில் ராணியின் மரணம் காரணமாக அந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டு இன்று இடம்பெற்றிருந்தது.
சிலையை திறந்து வைத்த பிறகு, அரச தம்பதியினர் யோர்க் தேவாலயத்து வெளியே உள்ள நலம் விரும்பிகளை வாழ்த்த சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டபோதே முட்டை வீச்சு சம்பவம் இடம்பெற்றிருந்தது.
மன்னர் சார்லஸ் நலன்விரும்பிகளை மிகவும் நெருங்கி அணுகக்கூடியவராகவும் மக்களுடன் கைகுலுக்கிக் கூடியவராவும் உள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல முட்டைகள் வீசப்பட்டபோதிலும் அதில் ஒன்று கூட அரச தம்பதி மீது படாத நிலையில் முட்டைகளை வீசிய நபரை காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.