கனேடிய பாடசாலைகளில் முகக் கவசப் பயன்பாடு கட்டாயம்

Kanimoli
2 years ago
  கனேடிய பாடசாலைகளில் முகக் கவசப் பயன்பாடு கட்டாயம்

கனேடிய பாடசாலைகளில் முகக் கவசப் பயன்பாடு கட்டாயமாக்கப்படக்கூடிய சாத்தியங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. மீளவும் முகக் கவசம் பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை விரைந்து கவனிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

றொரன்டோவின் சுகாதார அதிகாரி டொக்டர் கேட் முல்லிகன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். வைரஸ் காய்ச்சல் பரவுகை தீவிரமயுடைம் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தனது மகளும் நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். பிள்ளைகள் நோய்வாய்ப்படுவதனால் பெற்றோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முகக் கவசம் அணிதல் என்னும் எளிமையான நடவடிக்கையின் மூலம் நோய் பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே பாடசாலைகளில் மாணவர்களுக்கு முகக் கவசம் அணியும் நடைமுறையை தீவிரப்படுத்துவதன் மூலம் நோய் காவுவதனை வரையறுத்துக்கொள்ள முடியும் என டொக்டர் முல்லிகன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!