நேபாளத்தில் பதிவான 6.3 ரிக்டர் நிலநடுக்கம் - 6 பேர் உயிரிழப்பு

Prasu
3 years ago
நேபாளத்தில் பதிவான 6.3 ரிக்டர் நிலநடுக்கம் - 6 பேர் உயிரிழப்பு

நேபாள நாட்டில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. 

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. 

நேற்று காலை நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. டோட்டி மாவட்டத்தில் நிலநடுக்கத்தால் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது. 

இந்நிலையில், நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்ததில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4