பிரித்தானியாவின் பொருளாதார மந்த நிலை 2024-ம் ஆண்டின் பாதி வரை தொடரும் என்று கணிப்பு

Kanimoli
2 years ago
பிரித்தானியாவின் பொருளாதார மந்த நிலை 2024-ம் ஆண்டின் பாதி வரை தொடரும் என்று கணிப்பு

பிரித்தானியாவின் பொருளாதார மந்த நிலை 2024-ம் ஆண்டின் பாதி வரை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதத்தில் 75 அடிப்படை புள்ளிகளை அந்நாட்டின் மத்திய வங்கியான 'பேங்க் ஆஃப் இங்கிலாந்து' உயர்த்தியுள்ளது.

இதனை தொடர்ந்து வட்டி விகிதம் 3 சதவீதமாக உயர்ந்து 2008-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச அளவை எட்டியுள்ளது.

பேங்க் ஆஃப் இங்கிலாந்து நாணய கொள்கை கூட்டத்தில் வட்டியை உயர்த்துவது தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 7 வாக்குகள் ஆதரவாகவும், 2 வாக்குகள் எதிர்ப்பாகவும் பதிவாகின.

பிரித்தானியாவில் 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து வட்டி விகிதமானது 0.1%-ல் இருந்து 3% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

அதே சமயம் நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த செப்டம்பர் மாதத்தில் 10.1% ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட பணவிக்கம் 2 மடங்கு வேகமாக அதிகரிப்பதாக இங்கிலாந்து மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் பிரித்தானியாவின் பொருளாதாரம் 2023-ம் ஆண்டு முழுவதும் மந்த நிலையிலேயே இருக்கும் என்றும், 2024-ம் ஆண்டின் பாதி வரை இந்த நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!