அமெரிக்காவில் தேர்தலில் போட்டியிட்டு அசத்தும் தமிழர்கள்
அமெரிக்காவில் தற்போது நடைபெற்றுவரும் பிரதிநிதிகள் சபை தேர்தலில் பென்சில்வேனியாவின் புதிய மாவட்டமான 30வது மாவட்டத்தில் அரவிந்த் வெங்கட் வென்றுள்ளார். இவர் தமிழர். அங்கு 30வது மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் ஆகும். இவர் மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டு இவர் வென்றுள்ளார். அவசர கால மருத்துவராக இவர் பணியாற்றி வந்தார்.
1960க்கு பின் அங்கு மருத்துவர் ஒருவர் மாகாண பிரதிநிதிகள் சபைக்கு தெரிவு செய்யப்படுவது இதுவே முதல்முறை. அத்துடன் 2006ல் இருந்து பென்சில்வேனியாவில் குடியரசு கட்சி வேட்பளார்கள் வெற்றிபெறும் சீட்டில் ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் வென்றதே இல்லை.
ஒரு காலத்தில் 30வது மாவட்டம் குடியரசு கட்சியின் கோட்டையாக இருந்தது. அதன்பின் இந்த மாவட்டம் நீக்கப்பட்டது. அரவிந்த் வெங்கட் தற்போது மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள இந்த மாவட்டத்தில் அதிசயமாக ஜனநாயக கட்சி சார்பாக வென்றுள்ளார். இளம் வயதிலேயே இவர்கள் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் நாடு முழுக்க மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிக்கு இடையில் இங்கு கடுமையான மோதல் நிலவியது. இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சிண்டி கிரீக் என்ற மருத்துவ பணியாளர் ஆவார். குடியரசு கட்சியை சேர்ந்த அவர் 3500 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்துள்ளார்.
இருந்தாலும் அங்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் வெற்றிபெறுவது இதுவே முதல்முறையாகும். அருணா மில்லர், அரவிந்த் வெங்கட், கிருஷ்ணமூர்த்தி என்று அமெரிக்காவில் பல்வேறு தமிழர்கள் இந்த தேர்தலில் அடுத்தடுத்து வென்று வருகிறார்கள்.