ரஷ்யாவின் நெற்றிப்பொட்டு அடி

Kanimoli
1 year ago
ரஷ்யாவின் நெற்றிப்பொட்டு அடி

உலக வரலாற்றில் மிக நீண்ட காலம் நடைபெற்ற இராணுவ முற்றுகை என்ற வரலாற்றுப் பதிவைப் பெற்ற ஒரு படை நடவடிக்கை தான் லெனின் கிராட் முற்றுகை.

“ஒப்பரேன் பாபரோசா” என்ற மிகப் பெரிய படை நடவடிக்கையின் மூலம் சோவியத் ரஷ்யாவை ஆக்கிரமிக்கப் புறப்பட்ட ஜேர்மனியப் படைகள், ரஷ்யாவின் பழைய தலைநகரான லெனின் கிராட் மீது மேற்கொண்ட முற்றுகை அது.

The Siege of Leningrad என்றும், Leningrad Blockade என்றும் 900 - day siege என்றும் இன்றைக்கும் அச்சத்துடன் அழைக்கப்படுகின்ற அந்த வரலாற்று முற்றுகை, 1941ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி முதல், 1944ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி வரை சுமார் இரண்டரை வருடங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது.

உலகின் போரியல் வரலாற்றில் மிக அதிகமான இழப்புக்களை ஏற்படுத்திய முற்றுகை என்ற பதிவையும் அந்த முற்றுகை பெற்றிருக்கின்றது. ரஷ்யா உலக வல்லரசாக மாறுவதற்கு அடித்தளமிட்ட முற்றுகை என்றும் அதனைக் குறிப்பிடலாம்.