இந்திய- வங்காள தேச எல்லையில் துப்பாக்கி சூடு- கடத்தல்காரர்கள் இருவர் உயிரிழப்பு
Prasu
2 years ago
இந்தியா வங்காளதேச எல்லையான மேற்கு வங்கத்தில் சந்தேகத்திற்கு இடமாக சிலர் நடமாடுவதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கவனித்தனர்.
அப்போது சிலர் இந்தியர்கள் சிலரின் உதவியுடன் வங்காள தேசத்தை சேர்ந்த இருவர் கால்நடை தலைகளை கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை ஊர் திரும்பும்படி எல்லை காவல் படையினர் எச்சரித்தனர். ஆனால், கடத்தல்காரர்கள் உயர் பீம் டார்ச் லைட்களை அடித்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது அடித்தும், மூங்கில் கம்பு மற்றும் கற்களை வீசியும் தாக்கியும் உள்ளனர்.
இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.