இன்றைய வேத வசனம் 11.11.2022: தேவனேஇ சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். சங்கீதம் 51:10
1854ஆம் ஆண்டு, லண்டனில் ஏதோ ஒன்று ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. அது கெட்ட காற்றாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள்.
தேம்ஸ் ஆற்றில் கழிவு நீர்த்தேக்கம் இருந்ததால் மோசமான துர்நாற்றம் வீசியது. அதுவே “பெரிய துர்நாற்றம்” என்று அறியப்பட்டது.
ஆனால் அந்த துர்நாற்றத்திற்கு காற்று காரணமில்லை. அந்த காலரா தொற்றுநோய்க்கு அசுத்தமான தண்ணீரே காரணம் என்று டாக்டர் ஜான் ஸ்னோவினின் ஆராய்ச்சி காட்டுகிறது.
இன்னொரு பிரச்சினையைக் குறித்த நாம் நீண்ட காலமாய் அறிந்திருக்கிறோம். அதன் நாற்றம் பரலோகம் வரை வீசுகிறது. நாம் உடைந்த ஓர் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
அந்த பிரச்சினையை நாம் தவறாய் அடையாளம் கண்டு, அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, அதன் அறிகுறிகளுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆரோக்கியமான சமூகத் திட்டங்களும் கொள்கைகளும் சில நன்மைகளை தருகின்றன. ஆனால் அவை சமூகத்தின் தீமைக்கு மூலக் காரணமான நம்முடைய பாவ இதயங்களை குணமாக்க சக்தியற்றவை.
“மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது” (மாற்கு7:15) என்று இயேசு சொன்னபோது, அவர் சரீர வியாதிகளைக் குறித்து குறிப்பிடவில்லை.
மாறாக, அவர் நம் ஒவ்வொருவரின் ஆவிக்குரிய நிலையைக் கண்டறிகிறார். “அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்” (வச. 15) என்று சொல்லுகையில், நமக்குள் பதுங்கியிருக்கும் தீமைகளின் எண்ணங்களை அவர் பட்டியலிடுகிறார் (வச. 21-22).
தாவீது, “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்” (சங்கீதம் 51:5) என்கிறார்.
அவருடைய புலம்பல் நமக்கும் பொருந்தும். நாமும் துவக்கத்திலிருந்தே உடைக்கப்பட்டவர்கள். அதனால் தான் தாவீது “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும்” (வச. 10) என்று விண்ணப்பிக்கிறார். இயேசு தம்முடைய ஆவியினாலே நமக்குள் உருவாக்கும் புதிய இருதயம் ஒவ்வொரு நாளும் நமக்கு அவசியம்.
அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதை விட்டுவிட்டு, அதன் மூலக் காரணத்தை இயேசு சுத்திகரிக்கும்படி அனுமதிக்கலாம்.