சீன கரிம உரக் கப்பலின் சிக்கலைத் தீர்க்க தலையிடுகிறது வெளிவிவகார அமைச்சு

Prathees
1 year ago
சீன கரிம உரக் கப்பலின் சிக்கலைத் தீர்க்க தலையிடுகிறது வெளிவிவகார அமைச்சு

சீன கரிம உரக் கப்பலின் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு வழங்க வெளிவிவகார அமைச்சு ஒன்று கூடியுள்ளது.

கடந்த வருடம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீன கரிம உரங்களை ஏற்றுமதி செய்தமை மற்றும் இலங்கை செலுத்திய 6.7 மில்லியன் டொலர்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர ரீதியில் தீர்வு வழங்க உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காண இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் உதவியை அமைச்சர் மஹிந்த அமரவீர கோரியிருந்தார்.

இதன்படி, இரு அமைச்சர்களின் தலைமையில், விவசாய அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது, அதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அழைக்கப்பட்டனர்.